பானசாவடி-தர்மாவரம் இடையே மெமு ரெயில் இயக்கம்
பானசாவடி-தர்மாவரம் இடையே மெமு ரெயில் இயக்கப்படுகிறது.
பெங்களூரு:
தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெங்களூரு பானசாவடி-தர்மாவரம் இடையே இருமார்க்கமாக மெமு ரெயில்கள் இயங்குகிறது. இந்த ரெயில்களின் சேவை 5-ந் தேதி(நேற்று) முதல் தொடங்கி உள்ளது. பானசாவடியில் இருந்து தினமும் காலை 7.20 மணிக்கு புறப்படும் ரெயில் மதியம் 12 மணிக்கு தர்மாவரத்தை சென்றடையும்.
மறுமார்க்கமாக தர்மாவரத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 8.30 மணிக்கு பானசாவடியை வந்தடையும். இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் பையப்பனஹள்ளி,சன்னசந்திரா, எலகங்கா, ராஜனகுந்தி, தொட்டபள்ளாப்புரா, ஒட்டரஹள்ளி, மாகலிதுர்கா, தொண்டேபாவி, சோமேஸ்வரா, கவுரிபிதனூர், விதுரசுவதா, தேவரபள்ளி, இந்துப்பூர், மலகூர், சகேரபள்ளி, ரங்கேபள்ளி, பீனுகொண்டா, நாராயணபுரம், ஸ்ரீசத்ய சாய் பிரசாந்தி நிலையம், கொட்டசெருவு, பாசம்பள்ளி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதுபோல பயணிகளிடம் போதிய வரவேற்பு கிடைக்காத காரணத்தால் இருமார்க்கமாக இயங்கும் பெங்களூரு-மைசூரு, சாம்ராஜ்நகர்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story