கர்நாடகத்தில் அடுத்த மாதம் 8 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என தகவல்


கர்நாடகத்தில் அடுத்த மாதம் 8 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என தகவல்
x
தினத்தந்தி 6 May 2021 3:05 AM IST (Updated: 6 May 2021 3:05 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் அடுத்த மாதம் 8 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொடக்க பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவித்தப்படி ஜூன் 14-ந் தேதி வரை கோடை விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி தொடங்கி வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதே சமயம் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், 10-ம் வகுப்பு தேர்வு குறித்து மாணவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் செல்போன் மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களை தேர்வுக்கு தயாராகும்படி ஊக்குவிக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் 10-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பாடங்களை நினைவு கூறும் வகுப்புகள் தொடங்கப்பட்டு, இந்த வகுப்புகள் 14-ந் தேதி வரை நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து 15-ந் தேதி முதல் 8 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இயல்பான வகுப்புகள் தொடங்கும் என்று சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story