கொரோனா அச்சம்: மீரட்டில் 280 கைதிகளை ஜாமீனில் விடுவிக்க முடிவு


கொரோனா அச்சம்:  மீரட்டில் 280 கைதிகளை ஜாமீனில் விடுவிக்க முடிவு
x
தினத்தந்தி 6 May 2021 8:19 AM GMT (Updated: 6 May 2021 8:19 AM GMT)

கொரோனா அச்சம் எதிரொலியாக மீரட் சிறையில் இருந்து 280 கைதிகளை ஜாமீன் அல்லது பரோலில் விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

மீரட்,

நாட்டில் கொரோனா பாதிப்புகளை அதிகம் சந்தித்த மாநிலங்களில் உத்தர பிரதேசமும் ஒன்று.  நாளொன்றுக்கு 31 ஆயிரத்திற்கு மேல் பாதிப்பு பதிவாகி வருகிறது.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,62,474 ஆக உயர்ந்து உள்ளது.

இந்நிலையில், கொரோனா அச்சம் எதிரொலியாக
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரத்தில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 280 கைதிகளை ஜாமீனிலோ அல்லது பரோலிலோ விடுவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி மீரட் நகர சிறையின் மூத்த மாவட்ட சிறை துறை கண்காணிப்பாளர் பி.டி. பாண்டே கூறும்பொழுது, சிறை வளாகத்தில் முறையாக தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.  கைதிகளுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்க கூடிய ஊட்டச்சத்துகள் வழங்கப்படுகின்றன.

சிறையில் 45 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்கு உட்பட்ட கைதிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.  கொரோனா பாதிப்பு உயர்வால் சிறையில் இருந்து 280 கைதிகள் வரை ஜாமீனில் அல்லது பரோலில் விடுவிக்கப்படலாம் என கூறியுள்ளார்.


Next Story