மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் - மம்தா பானர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற வன்முறையில் பாஜக - திரிணமுல் தொண்டர்களிடையே மோதல் அதிகரித்துவந்தது.
இதில் பாஜக, திரிணமுல் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதனிடையே கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல் - முதல்மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்த இழப்பீடு பாஜகவை சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறையில் பாஜக, திரிணமுல் கட்சியைச் சேர்ந்த 16 பேர் உயிரிழந்ததது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story