3 நாடாளுமன்ற தொகுதிகள், 8 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தள்ளிவைப்பு - தேர்தல் கமிஷன் நடவடிக்கை
கொரோனா பரவல் காரணமாக 3 நாடாளுமன்ற தொகுதிகள், 8 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் தள்ளிவைத்துள்ளது.
புதுடெல்லி,
தாத்ரா நகர் ஹவேலி, மத்தியபிரதேச மாநிலம் காண்ட்வா, இமாசலபிரதேச மாநிலம் மண்டி ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன.
அதுபோல், அரியானா மாநிலத்தில் கல்கா, எல்லனாபாத், மேகாலயா மாநிலத்தில் ராஜபாலா, மவ்ரிங்னெங், ராஜஸ்தானில் வல்லபநகர், கர்நாடகாவில் சிந்த்கி, இமாசலபிரதேசத்தில் பதேபூர், ஆந்திர மாநிலத்தில் பட்வேல் ஆகிய 8 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.
இந்நிலையில், இந்த தொகுதிகளுக்காக நடைபெற இருந்த இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் தள்ளிவைத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக இம்முடிவை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது.
Related Tags :
Next Story