மத்திய பிரதேசத்தில் கொரோனா வார்டில் பணிபுரிந்த இளம் டாக்டர்கள் போராட்டம்


மத்திய பிரதேசத்தில் கொரோனா வார்டில் பணிபுரிந்த இளம் டாக்டர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 May 2021 11:10 PM GMT (Updated: 6 May 2021 11:10 PM GMT)

மத்திய பிரதேசத்தில் கொரோனா வார்டில் பணிபுரிந்த இளம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போபால்,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல இடங்களில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுகிறது. 

இந்த சூழலில் மத்திய பிரதேசத்தில் 6 அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் பணிபுரியும் இளம் டாக்டர்கள், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு, கொரோனா தொற்று ஏற்படும்போது சிறந்த சிகிச்சை வசதிகள் கிடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. 

ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் பல இளம் மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து அந்த மாநிலத்தின் மருத்துவ கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சராங் கூறுகையில், மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story