நெதர்லாந்தில் இருந்து 449 வெண்டிலேட்டர்கள் விமானம் மூலம் இந்தியா வருகை
நெதர்லாந்தில் இருந்து விமானம் மூலமாக 449 வெண்டிலேட்டர்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.
அந்த வகையில் நெதர்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலமாக 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 449 வெண்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளன. இந்த தகவலை இந்தியாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
🇮🇳🇳🇱
— Arindam Bagchi (@MEAIndia) May 6, 2021
Further strengthening our multifaceted cooperation. First of the shipment of 449 ventilators, 100 oxygen concentrators & other medical supplies from Netherlands arrives. Over the coming days, remaining medical equipment would be shipped. Value this support from our friend 🇳🇱 pic.twitter.com/P3zGZwW3X5
Related Tags :
Next Story