மருத்துவ பொருட்கள் வாங்க அனுமதிப்பதில் தாமதம்; மத்திய அரசு மீது மராட்டியம் குற்றச்சாட்டு


மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே
x
மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே
தினத்தந்தி 7 May 2021 8:40 AM IST (Updated: 7 May 2021 8:40 AM IST)
t-max-icont-min-icon

மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே மத்திய மருந்து துறை அத்தியாவசிய பொருட்கள் வாங்க மிகவும் தாமதமாக அனுமதி தருவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

நாம் பல்வேறு அத்தியாவசிய மருத்துவ பொருட்களை வெளிநாடுகளில் இருந்து வாங்க மத்திய மருந்து துறை வேகமாக ஒப்புதல் வழங்குவது இல்லை. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு ஒப்புதல், தடையில்லா சான்று கிடைக்கும் வழிமுறைக்கு அதிக நேரம் எடுக்கிறது. அடுத்த ஒரிரு நாளில் வெளிநாட்டில் இருந்து மராட்டியத்திற்கு 3.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இதேபோல ஆக்சிஜன் டேங்க், ஜெனரேட்டர்கள், மருந்துகள் வாங்க உலகளாவிய டெண்ர் விடப்பட்டுள்ளது. அதற்கு பல நாடுகள் விருப்பம் தெரிவித்து உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story