ஒடிசாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது


ஒடிசாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 7 May 2021 2:20 PM IST (Updated: 7 May 2021 2:20 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புவனேஷ்வர்,

ஒடிசாவில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால், அம்மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.  ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,238- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

கொரோனா தொற்று பரவத்தொடங்கியதில் இருந்து 12 ஆயிரம் எண்ணிக்கையை தாண்டுவது இதுதான் முதல் முறையாகும். ஒடிசாவில் எச்சரிக்கை விடுக்கும் விதமாக தொற்று பாதிப்பு விகிதம் 24.09 சதவீதமாக உயர்ந்துள்ளது.  

தொற்று பாதிப்பை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 50 ஆயிரத்து 799 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒடிசாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 12 ஆயிரத்து 400 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 86,950- ஆக உள்ளது. 

Next Story