ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் - அரியானா உள்துறை மந்திரி கோரிக்கை
ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அனைத்தும் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று அரியானா உள்துறை மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.
சண்டிகர்,
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா சிகிச்சைக்கான படுக்கை வசதி, ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகள் போன்றவற்றிற்கு தடுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு அவசியமான மருத்துவ ஆக்சிஜனுக்கு நாடு முழுவதும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுபாடு காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அனைத்தும் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று அரியானா உள்துறை மந்திரி விஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அரியானா உள்துறை மந்திரி விஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பாதுகாப்பான மற்றும் சுமூகமான செயல்பாடிற்காக ஆக்சிஜன் உற்பத்தி மையங்களின் கட்டுப்பாடும், நிர்வாகமும் ராணுவம் அல்லது துணை ராணுவ படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story