மும்பையில் வினோதம்: திருமணத்தில் மாறி மாறி தாலிக் கட்டிக்கொண்ட தம்பதி!
மும்பையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் இருவர் மாறி மாறி தாலிக் கட்டிக் கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
மும்பை,
மும்பையை சேர்ந்த தனுஜா பாட்டீல், ஷார்துல் கதம் ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவருக்கும் கடந்த ஆண்டே திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக திருமணம் தள்ளிப்போனது.
இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். அப்போது ஷார்துல் கதமுக்கு ஒரு யோசனையை முன் வைத்தார். காலங்காலமாக திருமண சடங்குகள் அனைத்தும் பெண்களுக்கே நடைபெறுவதாகவும், ஆணாதிக்கத்தை குறிக்கும் வகையில் இருப்பதாகவும் அதையே நாமும் பின்பற்றக்கூடாது என எண்ணிய ஹர்துல், திருமணத்தின் போது மாறி மாறி தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தனர்.
இது குறித்து பெற்றோர்கள், உறவினர்களிடம் கூறிய நிலையில் அவர் வாயடைத்து போயினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தினர். முடிவில் உறுதியாக இருந்த மணமக்கள் திருமணத்தின் போது தனுஜா பாட்டீல் ஷார்துல் கதம் மிற்கு தாலியை அணிவிக்க அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். அவரும் மாறி மணமகனுக்கு தாலியை அணிவித்தார்.
இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அவர் எல்லா சடங்குகளும் ஆணுக்கே ஏற்றது போல் ஒரு தலைபட்சமாக இருப்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. வாழ்நாள் முழுவதும் தான் இந்த தாலியை அணிந்து கொள்ளப்பவதாக தனுஜா பாட்டீல் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story