மத்திய விஸ்டா திட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி மீது மத்திய மந்திரி கடும் தாக்கு


மத்திய விஸ்டா திட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி மீது மத்திய மந்திரி கடும் தாக்கு
x
தினத்தந்தி 8 May 2021 12:57 AM IST (Updated: 8 May 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

மத்திய விஸ்டா திட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியின் இந்த எதிர்ப்புக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மந்திரி ஹர்தீப்சிங் புரி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி, 

டெல்லியில் புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட மத்திய விஸ்டா திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் மக்கள் மடியும் வேளையில் ரூ.1,350 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் ஒரு குற்ற விரயமாகும் என கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த எதிர்ப்புக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மந்திரி ஹர்தீப்சிங் புரி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘மத்திய விஸ்டா குறித்த காங்கிரசின் விமர்சனம் வினோதமானது. இந்த திட்டத்துக்கான செலவு பல ஆண்டுகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி. ஆனால் தடுப்பூசிக்காக மத்திய அரசு இதைவிட சுமார் 2 மடங்கு அதிகம் ஒதுக்கியிருக்கிறது. இந்த ஆண்டுக்கான சுகாதார பட்ஜெட் மட்டுமே ரூ.3 லட்சம் கோடி. இதில் இருந்தே எங்களின் முன்னுரிமை தெரிந்து விடும்’ என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘2012-ம் ஆண்டு அப்போதைய சபாநாயகரே இதற்காக நகர்ப்பற வளர்ச்சித்துறை மந்திரிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் தற்போது இந்த திட்டத்தை அவர்கள் எதிர்ப்பது ஏன்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story