சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷனுக்காக வாதாடிய வக்கீல் ‘திடீர்’ விலகல்


சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷனுக்காக வாதாடிய வக்கீல் ‘திடீர்’ விலகல்
x
தினத்தந்தி 8 May 2021 1:24 AM IST (Updated: 8 May 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷனுக்காக வாதாடிய வக்கீல் மொகித் டி.ராம் அக்குழுவில் இருந்து விலகினார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் சார்பில் வாதிடும் வக்கீல்கள் குழுவில் இருந்தவர் மொகித் டி.ராம். கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இவர் தேர்தல் கமிஷனுக்காக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார்.

இந்தநிலையில், நேற்று அவர் திடீரென தேர்தல் கமிஷனுக்கான வக்கீல்கள் குழுவில் இருந்து விலகினார். தேர்தல் கமிஷனின் தற்போதைய செயல்பாட்டுடன் தனக்கு ஒத்துப்போகவில்லை என்று தனது ராஜினாமா கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Next Story