பாதுகாப்பாக இயங்குவதற்காக ஆக்சிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படையுங்கள் - அரியானா மந்திரி யோசனை


பாதுகாப்பாக இயங்குவதற்காக ஆக்சிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படையுங்கள் - அரியானா மந்திரி யோசனை
x
தினத்தந்தி 8 May 2021 1:55 AM IST (Updated: 8 May 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பாக இயங்குவதற்காக ஆக்சிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படையுங்கள் என்று அரியானா சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ் யோசனை கூறியுள்ளார்.

சண்டிகார், 

அரியானா மாநிலத்தில் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு உள்துறை மற்றும் சுகாதாரத்துறை மந்திரியாக இருக்கும் அனில் விஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள் ஏதேனும் ஒரு காரணத்தால் செயல்படுவதை நிறுத்திவிட்டால், ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படும். ஆகவே, ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் பாதுகாப்பாகவும், சுமுகமாகவும் இயங்குவதற்காக அனைத்து ஆலைகளையும் ராணுவத்திடமோ அல்லது துணை ராணுவத்திடமோ ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story