தேசிய செய்திகள்

இங்கிலாந்துக்கு ஏற்றுமதிக்காக தயாரான 50 லட்சம் தடுப்பூசிகளை உள்நாட்டில் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை + "||" + Central government moves to use 50 lakh vaccines domestically ready for export to the UK

இங்கிலாந்துக்கு ஏற்றுமதிக்காக தயாரான 50 லட்சம் தடுப்பூசிகளை உள்நாட்டில் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

இங்கிலாந்துக்கு ஏற்றுமதிக்காக தயாரான 50 லட்சம் தடுப்பூசிகளை உள்நாட்டில் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புனேயில் உள்ள சீரம் நிறுவனம் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்காக 50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை தயாரித்து இருந்தது. ஆனால் நாட்டில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த தடுப்பூசிகளை உள்நாட்டிலேயே பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு சீரம் நிறுவனம் மத்திய சுகாதாரத்துறைக்கு சமீபத்தில் கடிதம் எழுதியது.

இதைத்தொடர்ந்து இந்த தடுப்பூசிகளை உள்நாட்டிலேயே பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பயன்படுத்திக்கொள்ள மேலும் 50 லட்சம் டோஸ்கள் தயாராக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதில் சில மாநிலங்களுக்கு தலா 3½ லட்சம் டோஸ்களும், பிற மாநிலங்களுக்கு தலா 1 லட்சம் டோஸ்களும், 2 மாநிலங்களுக்கு தலா 50 ஆயிரம் டோஸ்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இந்த தடுப்பூசிகளில் கோவிஷீல்டு என்பதற்கு பதிலாக அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி என பெயரிடப்பட்டிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கிற்கு எதிராக லண்டனில் போராட்டம் 3 போலீஸ் அதிகாரிகள் காயம்; 14 பேர் கைது
லண்டனில் ஊரடங்கை கண்டித்து நடந்த போராட்டத்தில் போலீசார் மற்றும் பொது மக்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
2. இங்கிலாந்தில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது.
3. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து புதுமுக வீரர் கான்வே இரட்டை சதம் அடித்து சாதனை
லண்டனில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அறிமுக வீரர் கான்வே இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.
4. ஐ.பி.எல். தொடருக்காக எங்களது போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யும் திட்டமில்லை: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்காக எங்களது போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யும் திட்டம் இல்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
5. இந்தியா, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்: 3-வது டி-20 ஆட்டத்திற்கான தேதி மாற்றம்
இந்தியா, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் போட்டியின் 3-வது டி-20 ஆட்டம் ஜூலை 14-ம் தேதிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.