நடிகை கங்கனா ரனாவத்திற்கு கொரோனா தொற்று
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
பிரபல நடிகை கங்கனா ரனாவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இன்ஸ்டகிராம் பக்கத்தில் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். யோகா செய்வது போன்ற புகைப்படத்தும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள கங்கனா ரனாவத் அதில் கூறியிருப்பதாவது: - நான் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தேன்.
கடந்த சில நாட்களாக கண் எரிச்சலும் இருந்தது. இமாச்சல பிரதேசத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் கொரோனா பரிசோதனை செய்தேன். இன்று முடிவுகள் பாசிட்டிவ் என வந்துள்ளது. கொரோனா உறுதியானதும் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். நீங்கள் அச்சப்பட்டால் அது மேலும் உங்களை அச்சுறுத்தும். கொரோனாவை அழித்துவிடுவோம். இது ஒரு சிறிய காய்ச்சல் தவிர வேறு ஒன்றும் இல்லை” எனவும் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story