கேரளாவில் முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய சாலைகள்..!


கேரளாவில் முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய சாலைகள்..!
x
தினத்தந்தி 9 May 2021 2:23 AM GMT (Updated: 9 May 2021 2:23 AM GMT)

கேரளாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் இரவு  நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஆனாலும் தொற்று பரவல் குறையாமல் இருந்து வந்ததால் முழு ஊரடங்கை அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்தது. இதன்படி, கேரளாவில் நேற்று (மே 8) முதல் வரும் 16 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக அரசு பஸ்கள் உள்பட அனைத்து வாகன போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய சரக்கு போக்குவரத்திற்கு முன் அனுமதியுடன் அனுமதி வழங்கப்படும், அதே போல், பால், பத்திரிகை வினியோகத்திற்கு தடை இல்லை. மருத்துவ சேவை வழக்கம் போல் தொடர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஒட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. மளிகை, காய்கறி, பழக்கடைகள் மட்டும் காலை 7 மணி முதல் 11 மணி வரை செயல்பட முழு ஊரடங்கில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. 

ஊரடங்கு காரணமாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவசியம் இன்றி வெளியில் சுற்றுபவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பி வருகின்றன. ஊரடங்கு காரணமாக தலைநகர் திருவனந்தபுரம் உள்பட மாநிலத்தின் முக்கிய நகரங்களிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

Next Story