நாடு முழுவதும் 9 லட்சம் பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை: மத்திய சுகாதாரத்துறை


நாடு முழுவதும் 9 லட்சம் பேருக்கு  ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை: மத்திய சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 9 May 2021 5:35 AM GMT (Updated: 9 May 2021 5:35 AM GMT)

நாடு முழுவதும் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா பெருந்தொற்று பரவல் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தற்போது இந்தியாவில் உள்ளது. தினசரி 4 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 38 லட்சத்தை தாண்டியுள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களில் 9 லட்சத்து 02 ஆயிரத்து 291- பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும் 1 லட்சத்து 70 ஆயிரத்து 841- பேருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் 4 லட்சத்து 88 ஆயிரத்து 861- அவசர சிகிச்சைக்கான படுக்கைகள் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்தது. 

Next Story