மேற்கு வங்காளம்: 25 சீனியர்கள், 15 புதுமுகங்களுடன் 43 பேர் கொண்ட மம்தா பானர்ஜி அமைச்சரவை பதவியேற்பு


மேற்கு வங்காளம்: 25 சீனியர்கள், 15 புதுமுகங்களுடன் 43 பேர் கொண்ட மம்தா பானர்ஜி அமைச்சரவை பதவியேற்பு
x
தினத்தந்தி 10 May 2021 6:01 AM GMT (Updated: 10 May 2021 6:40 AM GMT)

மேற்கு வங்காளம்: 25 சீனியர்கள், 15 புதுமுகங்களுடன் 43 பேர் கொண்ட மம்தா பானர்ஜி அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டசபை தோதலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து மாநில முதல் மந்திரியாக 3-ஆவது முறையாக கடந்த புதன்கிழமை மம்தா பானா்ஜி பதவியேற்றாா். 

அன்றைய தினம் அவா் மட்டும் பதவியேற்ற நிலையில் மந்திரிகள் பதவியேற்பு விழா இன்று நடைபெறுகிறது.  43 மந்திரிகளில் 19 பேர் இணை மந்திரிகளாக பதவியேற்கிறார்கள். அனுபவம் மிக்கவர்கள் மற்றும் புது முகங்கள் என கலவையான மந்திரி சபையை மம்தா பானர்ஜி அமைத்துள்ளார். 

மம்தா மந்திரி சபையில் ஏற்கனவே இருமுறை அங்கம் வகித்த அமித் மித்ரா காணொலி காட்சி வழியாக  நிதி மந்திரியாக பொறுப்பேற்றுகொண்டார்.
அனைவருக்கும் கவர்னர் ஜக்தீப் தங்கார் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்.விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 




Next Story