மராட்டியத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு


மராட்டியத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு
x
தினத்தந்தி 10 May 2021 7:41 AM GMT (Updated: 10 May 2021 7:41 AM GMT)

மராட்டியத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மும்பை,

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மராட்டியம் உள்ளது. கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் சென்றதால் அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 15- ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என முந்தைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அம்மாநிலத்தில் முன்பை  விட தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. 

எனினும், சராசரியாக 50 ஆயிரம் பேருக்கு தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இதனால், தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்க மராட்டிய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி  ராஜேஷ் தோப் - இந்த தகவலை சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார். மராட்டியத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. 


Next Story