கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தோல்வி - சோனியாகாந்தி குற்றச்சாட்டு


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 10 May 2021 8:28 AM GMT (Updated: 10 May 2021 8:28 AM GMT)

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது- சோனியாகாந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி

காங்கிரஸ் சோனியா காந்தி தலைமையில் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று காலை தொடங்கியது. 5 மாநில தேர்தல் முடிவுகள், கொரோனா பாதிப்பு, தடுப்பூசி உள்ளிட்டவை பற்றி சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

கூட்டத்தில் உரையாற்றிய  சோனியா காந்தி  கூறியதாவது:-

மேற்கு வங்காளம், கேரளா, அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தேர்தல்  முடிவுகள் குறித்து மிகுந்த அதிருப்தியை வெளிப்படுத்திய காந்தி, நாம் கடுமையான பின்னடைவுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

யதார்த்தத்தை ஏற்றுக்கொகொள்ளாவிட்டால் நாங்கள் சரியான பாடங்களை கற்றுக்கொள்ள மாட்டோம்.கேரளா, அசாமில் பதவியில் இருக்கும் அரசாங்கங்களை அகற்ற காங்கிரஸ் ஏன் தவறிவிட்டது மற்றும் மேற்கு வங்கத்தில் முழுமையான காலியாக இருந்தது என்பதை நாம் நேர்மையாக புரிந்து கொள்ள வேண்டும்.

மோடி அரசு தனது பொறுப்பை தட்டி கழித்து தடுப்பூசி போடுவதை மாநிலங்களுக்கு விட்டுவிட்டார்.   கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. அறிவியல்பூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசு வேண்டும் என்றே நிராகரித்தது 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு  தடுப்பூசி போடுவதற்கான செலவை மாநிலங்கள் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாக மத்திய அரசை  சோனியா காந்தி குற்றஞ்சாட்டினார்.

Next Story