‘சென்டிரல் விஸ்டா’ திட்டத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி; செலவுக்கு பிரியங்கா காந்தி எதிர்ப்பு


‘சென்டிரல் விஸ்டா’ திட்டத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி; செலவுக்கு பிரியங்கா காந்தி எதிர்ப்பு
x
தினத்தந்தி 10 May 2021 4:00 PM GMT (Updated: 10 May 2021 4:00 PM GMT)

டெல்லியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் ‘சென்டிரல் விஸ்டா’ திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற புதிய கட்டிடம், துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு புதிய இல்லங்கள் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும்.

‘சென்டிரல் விஸ்டா’ திட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சென்டிரல் விஸ்டா மற்றும் பிரதமரின் வீட்டுக்கான மொத்த செலவு ரூ.20 ஆயிரம் கோடி. இது, 62 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கான செலவு ஆகும். 22 கோடி ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் வாங்குவதற்கு சமம். 10 லிட்டர் ஆக்சிஜன் கொண்ட 3 கோடி சிலிண்டர்களை வாங்கலாம். மொத்தம் 12 ஆயிரம் படுக்கைகள் கொண்ட 13 எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளுக்கு சமம். அப்படி இருக்க ஏன் ‘சென்டிரல் விஸ்டா’ திட்டத்துக்கு செலவிட வேண்டும்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


Next Story