கர்நாடகாவில் புதிதாக 39,305 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 596 பேர் பலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 May 2021 5:47 PM GMT (Updated: 10 May 2021 5:47 PM GMT)

கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39 ஆயிரத்து 305 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை காரணமாக தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் மாநிலத்தில் இன்று புதிதாக 39 ஆயிரத்து 305 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 73 ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 006 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 32 ஆயிரத்து 188 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 83 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 596 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 372 ஆக அதிகரித்துள்ளது.

Next Story