டெல்லியில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு


டெல்லியில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 11 May 2021 10:42 AM GMT (Updated: 11 May 2021 10:42 AM GMT)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 12,481- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியை கொரோனா வைரசின் 2-வது அலை உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மே 17 ஆம் தேதி வரை டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் பலனாக  டெல்லியில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. 

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 12,481- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.   தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 347- பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பு விகிதம் 19 சதவீதத்தில் இருந்து 17.7 சதவீதமாக குறைந்துள்ளது. 

இதற்கிடையே,  இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின், ”கொரோனா வைரசின் 2-வது அலை இன்னும் உக்கிரமாகவே உள்ளதாக தெரிவித்தார். மேலும், கொரோனா தொற்று விகிதம் மற்றும் உயிரிழப்பு விகிதம் குறைந்து வந்தாலும் நாம் சவுகரியாமன சூழலை இப்போதைக்கு பெற முடியாது. தொற்று பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கும் கீழ் குறைய வேண்டும். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரம் அல்லது 4 ஆயிரத்திற்கும் கீழ் செல்ல வேண்டும்” என்றார். 


Next Story