தேசிய செய்திகள்

உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் : உலக சுகாதார நிறுவனம் + "||" + Current variant spreads rapidly, can breach vaccine: WHO chief scientist

உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் : உலக சுகாதார நிறுவனம்

உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் : உலக சுகாதார நிறுவனம்
உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.
புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சம் பெற்று வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் நிரந்த தீர்வு என்று நம்பப்படுகிறது. இதையடுத்து தடுப்பூசி உற்பத்தியை விரைவுபடுத்தி உள்ள மத்திய அரசு, பல்வேறு மாநிலங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தடுப்பூசியை அனுப்பி வருகிறது.

கொரோனா தொற்று பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசிகள் மட்டுமே வழியாக இருக்கும் சூழலில் உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக  உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலையில் பரவி வருவது பி1 617 வகை நோய் கிருமி. உருமாறிய இந்த வைரஸின் வீரியம் மற்றும் பரவும் தன்மை முதல் அலையில் பரவிய வைரஸை விட பல மடங்கு அதிகம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். 

மேலும் அமெரிக்கா, பிரிட்டன் சுகாதாரத்துறையினர் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளனர். இரண்டாம் அலை வேகமாக பரவ இதுவும் ஒரு காரணம். இதுமட்டுமல்லாமல் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மக்கள் கைவிட்டதும் முக்கிய காரணம் என்கின்றனர்.

தற்போது இந்தியாவில் கிட்டத்தட்ட 2 சதவீத பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்தால் அது மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என்றும் அதனை தடுப்பூசிகளால் கூட தடுக்க முடியாத சூழல் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகிறார் டாக்டர் சவுமியா சாமிநாதன். 

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு சிறை பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட விரும்பாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
2. குழந்தையை சுமந்து கொண்டு 40 கிலோமீட்டர் காடு, ஆறுகளை கடந்து கிராம மக்களுக்கு தடுப்பூசி போடும் பெண்
ஒப்பந்த முறையில் பணியில் இருக்கும் மந்தி குமாரி 40 கிலோமீட்டர் காடு, ஆறுகளை கடந்து சென்று கிராம மக்களுக்கு தடுப்பூசி போடுகிறார்.
3. மத்திய அரசின் கொரோனா நிர்வாகம்: வெள்ளை அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை செய்த ராகுல்காந்தி
காங்கிரஸ் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் நோக்கமே கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க இந்தியாவுக்கு உதவுவது ஆகும் என ராகுல் காந்தி கூறினார்.
4. கொரோனா 3-வது அலை அச்சம்...? கம்மம் மாவட்டத்தில் கடந்த 21 நாட்களில் 1480 குழந்தைகள் பாதிப்பு.!
மாவட்ட மருத்துவமனை அதிகாரி டாக்டர் பி மாலதி, மாவட்டத்தில் குழந்தைகள் மீட்பு விகிதம் இன்று வரை 100 சதவீதமாக உள்ளது என கூறினார்.
5. ஊரடங்கிற்கு எதிராக லண்டனில் போராட்டம் 3 போலீஸ் அதிகாரிகள் காயம்; 14 பேர் கைது
லண்டனில் ஊரடங்கை கண்டித்து நடந்த போராட்டத்தில் போலீசார் மற்றும் பொது மக்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.