பீகார்: கங்கை நதியில் மிதந்து வந்த 71 உடல்கள்: கொரோனாவால் உயிரிழந்தவர்களா?


பீகார்:  கங்கை நதியில் மிதந்து வந்த 71 உடல்கள்:  கொரோனாவால் உயிரிழந்தவர்களா?
x
தினத்தந்தி 11 May 2021 12:17 PM GMT (Updated: 11 May 2021 12:17 PM GMT)

பீகாரில் கங்கை நதியில் நதியில் மிதந்து வந்த பல உடல்கள் உரிய மரியாதையுடன் புதைக்கப்பட்டன

பாட்னா

பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள சவுஸா நகரில் கங்கை நதியில் நேற்று 71 உடல்கள் மிதந்து வந்ததைப் பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அங்கு வந்த அரசு அதிகாரிகள்  உடல்களை கைபற்றி  அடக்கம் செய்தனர்

உடல்கள் அனைத்தும் தண்ணீரில் ஊறிவிட்டன. ஏறக்குறைய 5 முதல் 7 நாட்கள்வரை தண்ணீரில் கிடந்திருக்க வேண்டும்.  வாரனாசி, அலகாபாத்திலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்ப்டுகிரது.

உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களா என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அந்த உடல்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்களா என்பதைக் கண்டறிய 71 சடலங்களில் இருந்தும் மருத்துவ அதிகாரிகள் மாதிரிகளை எடுத்துக்கொண்ட பின்பே புதைக்கப்பட்டன. ஏறக்குறைய இரவு முழுவதும் உடல்களைப் புதைக்கும் பணி நடந்து இன்று காலைதான் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பக்ஸர் மாவட்ட உயர் அதிகாரி கே.கே.உபாத்யாயே கூறுகையில், “நதியில் மிதந்து வந்த பல உடல்கள் உரிய மரியாதையுடன் புதைக்கப்பட்டன. பல உடல்கள் எரியூட்டப்பட்டன. உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்களான வாரணாசி, அலகாபாத் நகரங்களில் இருந்து இந்த உடல்கள் நதியில் வந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யாமல் உத்தரப்பிரதேசத்திலிருந்து கங்கை நதியில்  தூக்கி எறியப்பட்டிருப்பதாக பீகார் அரசு அதிகாரிகள் குற்றம்சாட்டி இருந்தனர்.

Next Story