கேரளாவில் இன்று 37,290- பேருக்கு கொரோனா தொற்று


கேரளாவில் இன்று 37,290- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 11 May 2021 12:26 PM GMT (Updated: 11 May 2021 12:26 PM GMT)

கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 79 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,290- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பு காரணமாக இன்று மட்டும் 79 பேர் உயிரிழந்த நிலையில் தொற்றில் இருந்து  32,978- பேர் குணம் அடைந்துள்ளனர்.  

கேரளாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்து 957- ஆக உள்ளது.  தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 287- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

இதுவரை 1 கோடியே 72 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 26.77- சதவீதமாக உள்ளது. 


Next Story