கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா


கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா
x
தினத்தந்தி 11 May 2021 12:42 PM GMT (Updated: 11 May 2021 12:42 PM GMT)

கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள முதல் மூன்று மாநிலங்களில் இடம் பிடித்துள்ள கர்நாடகவில் , தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.  எனினும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வர மறுக்கிறது. 

இந்த நிலையில்  கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என அந்த மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த எடியூரப்பா கூறியதாவது:- கொரோனா தொற்று நேற்று முதல் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. மக்கள் எங்களுக்கு  ஒத்துழைப்பு அளித்தால் அது பலனுள்ளதாக இருக்கும். 

 கர்நாடகத்தில் நிறைய கொரோனா பாதிப்புகள் உள்ளன. பலி எண்ணிக்கைகளும் நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகரித்துள்ளன. இதன் பின்னணியில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாங்கிக் கொள்ளலாம். கரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்” என்றார். 

Next Story