மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மத்திய படை பாதுகாப்பு; உள்துறை அமைச்சகம் உத்தரவு


மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மத்திய படை பாதுகாப்பு; உள்துறை அமைச்சகம் உத்தரவு
x
தினத்தந்தி 11 May 2021 2:27 PM GMT (Updated: 11 May 2021 2:27 PM GMT)

மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 77 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பாதுகாப்பு அமைப்புகள் அறிக்கை வழங்கியுள்ளன.

 அந்த மாநிலத்தில் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்ய சென்ற உயர்நிலை குழுவும் இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.இதையடுத்து அந்த மாநிலத்தில் அனைத்து பா.ஜ.க., எம்.எல்.ஏ.க்களுக்கும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.), மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சி.ஆர்.பி.எப்.) மூலம் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த மாநில எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சுவேந்து அதிகாரிக்கு ஏற்கனவே ‘இசட்’ பிரிவின் கீழ் சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின்படி 61 எம்.எல்.ஏ.க்களுக்கு ‘எக்ஸ்’ பிரிவின் கீழும், அதற்கு அடுத்த உயர் பிரிவான ‘ஒய்’ பிரிவின் கீழ் 15 எம்.எல்.ஏ.க்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.


Next Story