கொரோனா தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தாவிட்டால் அடுத்தடுத்த கொரோனா அலைக்கு வாய்ப்பு; பிட்ச் ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை


கொரோனா தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தாவிட்டால் அடுத்தடுத்த கொரோனா அலைக்கு வாய்ப்பு; பிட்ச் ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 May 2021 3:00 PM GMT (Updated: 11 May 2021 3:00 PM GMT)

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தாவிட்டால், அடுத்தடுத்து கொரோனா அலை உருவாகும் வாய்ப்புகள் இருப்பதாக ஒரு ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தடுப்பூசி

இந்திய மக்கள் தொகையில் கடந்த 5-ந் தேதி நிலவரப்படி 9.4 சதவீதம் பேர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 9-ந் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 16.94 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பொருளாதார மதிப்பீடு தர நிர்ணயம் வழங்கும் பிட்ச் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மெதுவாக நடந்து வருகிறது. இதனால் தற்போதைய 2-வது அலை முடிந்தபின், அடுத்தடுத்து கொரோனா அலைகள் உருவாகும் சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது.

பொருளாதார பாதிப்பு

இந்தியாவில் உள்ள நிதி நிறுவனங்களுக்கு இது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏப்ரல், மே மாதங்கள் மட்டும் பொருளாதார செயல்பாடுகள் மந்தமடையலாம், பொருளாதார மீட்சி சற்று பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். தற்போதுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கை அதிகாரிகள் அமல்படுத்தினாலும், பொருளாதார நடவடிக்கையை பாதிக்காத வகையில் இருந்து வருகிறது. ஆனால் அதிகமான மாநிலங்களில் நீண்ட கால ஊரடங்கை நடைமுறைப்படுத்தினால் பொருளாதார பாதிப்பு ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story