மராட்டியம், கர்நாடகா மாநிலங்களில் இன்று எத்தனை பேருக்கு கொரோனா?


மராட்டியம், கர்நாடகா மாநிலங்களில் இன்று எத்தனை பேருக்கு கொரோனா?
x
தினத்தந்தி 11 May 2021 3:45 PM GMT (Updated: 11 May 2021 3:45 PM GMT)

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 956- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

 நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமான மராட்டியத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 71,966 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 793 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஒட்டுமொத்தமாக 51,79,929 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 45,41,391 பேர் குணமடைந்துள்ளனர். 77,191 பேர் உயிரிழந்துள்ளனர். 5,58,996 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,510 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 22,584 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 480 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 20,13,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,852 பேர் உயிரிழந்துள்ளனர். 14,05,869 பேர் குணமடைந்துள்ளனர். 5,87,452 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story