மே.வங்காளத்தில் மேலும் 20,136-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று


மே.வங்காளத்தில் மேலும் 20,136-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
x
தினத்தந்தி 11 May 2021 4:45 PM GMT (Updated: 11 May 2021 4:45 PM GMT)

மேற்கு வங்காளத்தில் மேலும் 20,136- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 20,136- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 18,994- பேர் குணம் அடைந்த நிலையில் 132- பேர் கொரோனா வைரசுக்கு பலியாகினர்.  

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்புடன் 1 லட்சத்து 28 ஆயிரத்து 863- பேர் சிகிச்சையில் உள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 32 ஆயிரமாக உள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் இன்று 8,668- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பால் இன்று 7,324- பேர் குணம் அடைந்த நிலையில்,  217- பேர் உயிரிழந்துள்ளனர். 

அரியானாவில் இன்று 11,637- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 144- பேர் உயிரிழந்த நிலையில் 15,728- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புடன் 1 லட்சத்து 08 ஆயிரத்து 997- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story