தேசிய செய்திகள்

பி.1.617 மரபணு மாற்ற வைரஸ் இந்திய மரபியல் மாற்ற கொரோனா வைரஸ் : மத்திய அரசு மறுப்பு + "||" + WHO has not used term ‘Indian Variant’ for B.1.617 strain: Health Ministry

பி.1.617 மரபணு மாற்ற வைரஸ் இந்திய மரபியல் மாற்ற கொரோனா வைரஸ் : மத்திய அரசு மறுப்பு

பி.1.617 மரபணு மாற்ற வைரஸ் இந்திய மரபியல் மாற்ற கொரோனா வைரஸ் :  மத்திய அரசு மறுப்பு
பி.1.617 மரபணு மாற்ற கொரோனா வைரஸ் இந்திய மரபியல் மாற்ற வைரஸ் என்று ஊடகங்களில் வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
புதுடெல்லி

இந்தியாவில் பரவலாகக் காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் உலகளவில் 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கு முக்கியக் காரணம் பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்தான். கடந்த அக்டோபர் மாதம் முதன்முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ்தான் தற்போது உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்களில் உள்ள 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 4,500 மாதிரிகளில் கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு  அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவைத் தவிர்த்து இந்தியாவில் உள்ள பி.1.617 உருமாறிய வைரஸ் பிரிட்டனில்தான் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பி.1.617 மரபணு மாற்ற கொரோனா வைரஸ் இந்திய மரபியல் மாற்ற வைரஸ் என்று ஊடகங்களில் வெளியான தகவலை மத்திய சுகாதாரத்துறை  மறுத்துள்ளது.

இந்த வைரஸ் இந்திய வைரசாகும் என உலக சுகாதார நிறுவனம் எங்கும் கூறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் உலகம் முழுதும் பரவக்கூடியது என்றும் மிகவும் கவலைக்குரியது என்றும் வெளியான செய்திகளும் மத்திய அரசால் மறுக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடக செய்திகளுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு மனைவி உயிரிழந்ததால் மன உளைச்சலில் மகளை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட நபர்
கொரோனா பாதிப்பால் மனைவி உயிரிழந்ததால் மன உளைச்சலில் இருந்த நபர் தனது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.
2. ஆப்பக்கூடல் பேரூராட்சி அதிகாரி கொரோனாவுக்கு பலி- கொடுமுடி பகுதியில் 23 பேருக்கு தொற்று
ஆப்பக்கூடல் பேரூராட்சி அதிகாரி கொரோனாவுக்கு பலியானார். கொடுமுடி பகுதியில் 23 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
3. சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து நாடுகள் அனுப்பி வைத்த மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்களை சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகள் அனுப்பி வைத்துள்ளன.
4. கொரோனாவால் உயிரிழந்து யாரும் உரிமைகோராமல் எரியூட்டப்பட்ட உடலின் அஸ்தியை சேகரித்து கங்கையில் கரைக்கும் தன்னார்வலர்கள்
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் பலர் யாரும் உரிமை கோராத நிலையில் எரியூட்டப்பட்டு வருகிறது.
5. குஜராத்: கொரோனாவை விரட்ட மாட்டுச்சாண குளியல் - எச்சரிக்கும் மருத்துவர்கள்
மாட்டுச்சாணம் மற்றும் மாட்டு சிறுநீரை உடலில் பூசிக்கொள்வதால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று சிலர் மூட நம்பிக்கையில் செயல்பட்டு வருகின்றனர்.