கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் 6-8 வாரங்கள் ஊரடங்கு தேவை: ஐசிஎம்ஆர் இயக்குநர்


கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் 6-8 வாரங்கள் ஊரடங்கு தேவை:  ஐசிஎம்ஆர் இயக்குநர்
x
தினத்தந்தி 12 May 2021 11:09 AM GMT (Updated: 12 May 2021 11:10 AM GMT)

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் 6-8 வாரங்கள் ஊரடங்கை தளர்த்தக் கூடாது என ஐசிஎம்ஆர் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,
  
கொரோனா தொற்று  பாதிப்பு 10 சதவீதத்திற்கும் மேல் உள்ள மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்கள்  ஊரடங்கு தேவை என்று இந்திய மருத்துவர் ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.   தற்போது இந்தியாவில் 4-ல் 3 மாவட்டங்களில்  10 சதவீதத்திற்கும் மேல் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களும் இதில் அடங்கும். 

ஐசிஎம்.ஆர் இயக்குநர் மேலும் கூறுகையில், “ தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் அமலில் இருக்க வேண்டும். தொற்று பாதிப்பு சதவிகிதம் 10 -ல் இருந்து 5 ஆக குறைந்தால் நாம் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம். 

ஆனால், அது 6 முதல் 8 வாரங்களுக்கு இருக்கக் கூடாது. டெல்லியில் 35 சதவிகிதமாக இருந்த தொற்று பாதிப்பு  17 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஆனால் டெல்லியில் நாளை கட்டுப்பாடுகளை தளர்த்தினால் அது பேரழிவாக அமையும்” என்றார். 

Next Story