மராட்டியத்தில் மேலும் 46,781- பேருக்கு கொரோனா தொற்று


மராட்டியத்தில் மேலும் 46,781- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 12 May 2021 2:08 PM GMT (Updated: 12 May 2021 2:08 PM GMT)

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 46, 781- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் மேலும் 46,781- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 58,805- பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 816- பேர் தொற்று பாதிப்புக்கு இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர்.  மராட்டியத்தில் தொற்று பாதிப்புடன் 5 லட்சத்து 46 ஆயிரத்து 129- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 52 லட்சத்து 26 ஆயிரத்து 710- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆயிரத்து 007- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 46 லட்சத்து 196- ஆக உள்ளது. 

Next Story