தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 43 ஆயிரம் பேருக்கு கொரோனா - 95 பேர் பலி + "||" + Kerala Coronavirus Update on today date 12th May

கேரளாவில் இன்று 43 ஆயிரம் பேருக்கு கொரோனா - 95 பேர் பலி

கேரளாவில் இன்று 43 ஆயிரம் பேருக்கு கொரோனா - 95 பேர் பலி
கேரளாவில் இன்று 43 ஆயிரத்து 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பரவல் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 43 ஆயிரத்து 529 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 10 ஆயிரத்து 934 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 லட்சத்து 32 ஆயிரத்து 789 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 34 ஆயிரத்து 600 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 71 ஆயிரத்து 738 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இன்று 95 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 53 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 320 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு மாலத்தீவுகள் தடை
இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகளுக்கு மாலத்தீவுகள் தடை விதித்துள்ளது.
2. பி.1.617 மரபணு மாற்ற வைரஸ் இந்திய மரபியல் மாற்ற கொரோனா வைரஸ் : மத்திய அரசு மறுப்பு
பி.1.617 மரபணு மாற்ற கொரோனா வைரஸ் இந்திய மரபியல் மாற்ற வைரஸ் என்று ஊடகங்களில் வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
3. கொரோனாவுக்கு மனைவி உயிரிழந்ததால் மன உளைச்சலில் மகளை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட நபர்
கொரோனா பாதிப்பால் மனைவி உயிரிழந்ததால் மன உளைச்சலில் இருந்த நபர் தனது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.
4. ஆப்பக்கூடல் பேரூராட்சி அதிகாரி கொரோனாவுக்கு பலி- கொடுமுடி பகுதியில் 23 பேருக்கு தொற்று
ஆப்பக்கூடல் பேரூராட்சி அதிகாரி கொரோனாவுக்கு பலியானார். கொடுமுடி பகுதியில் 23 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
5. சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து நாடுகள் அனுப்பி வைத்த மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்களை சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகள் அனுப்பி வைத்துள்ளன.