உத்தரகாண்ட்: கொரோனா பாதித்து, சிகிச்சைக்கு சேர்ந்த 48 மணிநேரத்தில் 50% மரணம் பதிவு; அறிக்கையில் அதிர்ச்சி தகவல்


உத்தரகாண்ட்:  கொரோனா பாதித்து, சிகிச்சைக்கு சேர்ந்த 48 மணிநேரத்தில் 50% மரணம் பதிவு; அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 13 May 2021 11:21 AM GMT (Updated: 13 May 2021 11:21 AM GMT)

உத்தரகாண்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்த 48 மணிநேரத்தில் 50% மரணம் நடந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

டேராடூன்,

உத்தரகாண்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் கூடுதலாக சென்றுள்ளது.  அவர்களில் 1 லட்சத்து 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து சென்றுள்ளனர்.  இதுவரை 4,120க்கும் கூடுதலானோர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில், உத்தரகாண்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை பற்றி தணிக்கை செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.  இந்த குழுவின் தலைவர் மற்றும் பேராசிரியரான ஹேமசந்திரா செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, உத்தரகாண்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்த 48 மணிநேரத்தில் 50% மரணம் நடந்துள்ளது என அதிர்ச்சி கலந்த தகவலை கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்புகளுக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிய 4 முதல் 5 நாட்களுக்குள் மக்கள் முன்னெச்சரிக்கையாக சிகிச்சை எடுத்து கொள்ள மருத்துவமனையில் சேர வேண்டும்.  ஆனால், அவர்கள் மருத்துவமனைக்கு செல்லவில்லை.  இதனால் அதிகளவில் மரணம் ஏற்பட்டு உள்ளது.  அவர்கள் காலதாமதமாக மருத்துவமனையில் சேர்ந்ததும் கூடுதல் காரணியாகும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story