நாட்டில் கடந்த 2 வாரங்களாக 187 மாவட்டங்களில் குறைந்த கொரோனா பாதிப்புகள்: மத்திய சுகாதார அமைச்சகம்


நாட்டில் கடந்த 2 வாரங்களாக 187 மாவட்டங்களில் குறைந்த கொரோனா பாதிப்புகள்:  மத்திய சுகாதார அமைச்சகம்
x
தினத்தந்தி 13 May 2021 3:18 PM GMT (Updated: 13 May 2021 3:18 PM GMT)

நாட்டில் கடந்த 2 வாரங்களாக 187 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஒரே நாளில் 4,120 பேர் உயிரிழந்து உள்ளனர்.  கொரோனா வைரசின் 2வது அலை முதல் அலையை விட அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறும்பொழுது, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், ஒரு லட்சத்திற்கும் கூடுதலான கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையை கொண்டுள்ளன.

8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 50 ஆயிரம் முதல் ஒரு லட்சத்திற்கு உட்பட்ட கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையை கொண்டுள்ளன.  16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 50 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையை கொண்டுள்ளன என கூறியுள்ளார்.

இதேபோன்று, கடந்த 2 வாரங்களாக நாட்டில் தொடர்ச்சியாக 187 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளன என தெரிவித்து உள்ளார்.


Next Story