'ஜனநாயகத்தின் அழிவு’ - வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த மே.வங்காள கவர்னர் பேச்சு


ஜனநாயகத்தின் அழிவு’ - வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த மே.வங்காள கவர்னர் பேச்சு
x
தினத்தந்தி 13 May 2021 7:34 PM GMT (Updated: 13 May 2021 7:34 PM GMT)

மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளை மாநில கவர்னர் ஜக்தீப் தங்கர் நேற்று நேரில் பார்வையிடுகிறார்.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 213 தொகுதிகளை கைப்பற்றி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துள்ளது. பாஜக 77 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. சிபிம் கூட்டணி 1 தொகுதியையும், மற்றவை 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளது. ஆட்சியை தக்க வைத்துள்ள மம்தா பானர்ஜி 3-வது முறையாக மேற்குவங்காள முதல்மந்திரியாக பதவியேற்றுள்ளார்.

தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து பாஜக கட்சினர், வீடுகள், அலுவலகங்கள், கடைகள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.

மேற்குவங்காளத்தின் பல்வேறு மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்களில் மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்குவங்காள அரசு தெரிவித்துள்ளது. ஆனால், வன்முறை சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை நடந்த பகுதிகளை மேற்குவங்காள கவர்னர் ஜக்தீப் தங்கர் நேற்று நேரில் பார்வையிட்டார். வன்முறையால் குடும்ப உறுப்பினர்களை இழந்த மக்களை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். 

வன்முறை நடைபெற்ற மாவட்டங்களில் ஒன்றான கூட் பிஹர் மாவட்டத்திற்கு சென்ற கவர்னர் அங்கு வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் ஜக்தீப் தங்கர், சட்டம் ஒழுங்கு ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்த நிலை இது. இதை நான் ஒரு போதும் கற்பனையில் கூட நினைத்துப்பார்த்தது கிடையாது.

போலீசார் மீதான அச்சத்தை மக்களின் கண்களில் நான் பார்க்கிறேன். நான் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளேன். இது ஜனநாயகத்தின் அழிவு. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி காடுகளில் வசிக்கின்றனர்.

வன்முறை கும்பல் மீண்டும் வருவார்கள் என்று பெண்கள் என்னிடம் கூறுகின்றனர். கவர்னர் முன் இது போன்ற பாதுகாப்பு தோல்வி உள்ளது. இதைப்பார்த்து நான் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளேன். இங்குள்ள மக்கள் எத்தகையை சூழ்நிலையை கடந்து செல்கின்றனர் என்பதை என்னால் நினைத்துப்பார்க்க முடிகிறது’ என்றார்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை கவனர் ஜக்தீப் தங்கர் பார்வையிட வருவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடிகளை காட்டிய சம்பவமும் கூட்ச் பிஹர் மாவட்டத்தில் அரங்கேறியது. முன்னதாக, கவர்னரின் இந்த பயணத்திற்கு மேற்குவங்காள அரசு எதிர்ப்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.        

Next Story