தேசிய செய்திகள்

கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கிய 100 மாவட்ட கலெக்டர்களுடன் மோடி பேசுகிறார் + "||" + Modi talks to 100 district collectors caught in the grip of Corona

கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கிய 100 மாவட்ட கலெக்டர்களுடன் மோடி பேசுகிறார்

கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கிய 100 மாவட்ட கலெக்டர்களுடன் மோடி பேசுகிறார்
கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கியுள்ள 100 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனாவின் மோசமான பிடியில் 10 மாநிலங்கள் சிக்கி உள்ளன. அவை மராட்டியம், டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், கேரளா, கர்நாடகம், தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்காளம் மற்றும் ராஜஸ்தான் ஆகும்.

இந்த மாநிலங்கள்தான் தினசரி பாதிப்பில் பெரும்பங்கு வகிக்கின்றன. நேற்றும் இவை 72 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளன.

கொரோனாவால் நேற்று பலியானோர் எண்ணிக்கையிலும் 10 மாநிலங்களே முக்கிய பங்கு ( 74.30 சதவீதம்) வகிக்கின்றன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் பேச முடிவு

இந்தநிலையில் கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கியுள்ள 100 மாவட்டங்களின் கலெக்டர்களுடன் பிரதமர் மோடி பேச முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் 18-ந் தேதியும், 20-ந் தேதியும் 2 கட்டங்களாக பிரதமர் மோடி இந்த கலந்துரையாடலை நடத்துகிறார்.

நாடு கொரோனாவுக்கு எதிராகப்போராடி வரும் நிலையில் இப்படி மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி பேசப்போவது இதுவே முதல் முறை ஆகும்.

முதல் கட்டமாக 18-ந் தேதியன்று, 9 மாநிலங்களின் 46 மாவட்ட கலெக்டர்களுடனும், 2-வது கட்டமாக 20-ந் தேதியன்று 54 மாவட்ட கலெக்டர்களுடனும் மோடி பேசுகிறார்.

இது காணொலி காட்சி வழியாக நடைபெறும்.

எதிர்பார்ப்பு

அப்போது பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் தற்போதைய தொற்று பரவல் நிலவரத்தையும், சுகாதார கட்டமைப்பு வசதிகளையும் கேட்டறிவதோடு, கட்டுப்படுத்துவதற்கு சில ஆலோசனைகளை பிரதமர் மோடி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவருடன் யோகி ஆதித்யநாத் இன்று சந்திப்பு
உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவரை இன்று சந்தித்து பேசுகிறார்.
2. டிசம்பர் மாதத்துக்குள் 200 கோடி தடுப்பூசி உற்பத்தி: ஜே.பி.நட்டா
டிசம்பர் மாதத்துக்குள் இந்தியாவிடம் 200 கோடி தடுப்பூசி இருக்கும் என்று ஜே.பி.நட்டா கூறினார். நிலம், நீர், ஆகாய மார்க்கமாக மோடி ஆக்சிஜன் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
3. பிரதமர் மோடி- உத்தவ் தாக்கரே தனிப்பட்ட சந்திப்பு ஏன்? - சிவசேனா விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனிப்பட்ட சந்திப்பு ஏன் என்பதற்கு சிவசேனா விளக்கம் அளித்துள்ளது.
4. பீட்சா, பர்கரை வீடு தேடிச்சென்று அளிக்கும்போது ரேஷன் பொருட்களை வீட்டிலேயே கொடுக்கக்கூடாதா? மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி
பீட்சா, பர்கரை வீடு தேடிச்சென்று அளிக்கும்போது, ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று கொடுக்கக்கூடாதா என்று மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி விடுத்துள்ளார்.
5. மில்கா சிங் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி பிரதமர் மோடி நலம் விசாரித்தார்
மில்கா சிங் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.