நாடு முழுவதும் இதுவரை ஐகோர்ட்டு நீதிபதிகள் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு


நாடு முழுவதும் இதுவரை ஐகோர்ட்டு நீதிபதிகள் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 14 May 2021 2:28 AM GMT (Updated: 14 May 2021 2:28 AM GMT)

நாடு முழுவதும் இதுவரை ஐகோர்ட்டு நீதிபதிகள் 106 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் அனைத்து பிரிவினரையும் தனது மாய வலைக்குள் சிக்க வைத்து வரும் கொரோனா தொற்று நீதித்துறையையும் விட்டுவைக்கவில்லை. அங்கும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா வேதனை தெரிவித்து உள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் கூறுகையில், ‘இந்த தொற்று அனைவரையும் பாதித்து வருகிறது. மிகுந்த வலியுடனும், வேதனையுடனும் நான் சில உண்மைகளை கூற வேண்டும். அதாவது சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் முதல் ஊழியர் கடந்த 27-ந்தேதி தொற்றுக்கு ஆளானார். அவரை தொடர்ந்து தற்போது வரை சுமார் 800 ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்’ என்று கூறினார்.

மேலும் நாடு முழுவதும் இதுவரை 2,768 நீதித்துறை அதிகாரிகள் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாகவும், இதைப்போல 106 ஐகோர்ட்டு நீதிபதிகளும் கொரோனாவின் பிடியில் சிக்கியிருப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார். அதேநேரம் 2 முக்கியமான ஐகோர்ட்டுகளின் நிலவரம் குறித்து இன்னும் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தொற்று பாதித்தவர்களில் 3 நீதிபதிகளையும், 34 நீதித்துறை அதிகாரிகளையும் தொற்றுக்கு பறிகொடுத்து விட்டதாகவும் என்.வி.ரமணா வேதனையுடன் தெரிவித்தார்.

Next Story