மே.வங்காளம்: வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் கவர்னர் சந்திப்பு


மே.வங்காளம்: வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் கவர்னர் சந்திப்பு
x
தினத்தந்தி 14 May 2021 11:46 AM GMT (Updated: 14 May 2021 11:46 AM GMT)

தேர்தலுக்கு பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தன்கர் இன்று சந்தித்துப் பேசினார்.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 213 தொகுதிகளை கைப்பற்றி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துள்ளது. 

பாஜக 77 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. சிபிம் கூட்டணி 1 தொகுதியையும், மற்றவை 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளது. ஆட்சியை தக்க வைத்துள்ள மம்தா பானர்ஜி 3-வது முறையாக மேற்குவங்காள முதல்மந்திரியாக பதவியேற்றுள்ளார்.

தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து பாஜக கட்சினர், வீடுகள், அலுவலகங்கள், கடைகள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.  தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்களில் மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்குவங்காள அரசு தெரிவித்துள்ளது. ஆனால், வன்முறை சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கப் போவதாக மேற்கு வங்க கவர்னர் ஜெக்தீப் தன்கர் கூறியிருந்தார். ஆனால், மேற்கு வங்க கவர்னரின் செயல் மரபுக்கு எதிரானது என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தன்கர் இன்று 2-  வது நாளாக  சந்தித்துப் பேசினார். ரங்பக்லி மற்றும் அகோமனி பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்களை சந்தித்து மேற்கு வங்காள கவர்னர் ஆறுதல் தெரிவித்தார். 

Next Story