மராட்டியத்தில் இன்று 39,923- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று


Photo Credit: PTI
x
Photo Credit: PTI
தினத்தந்தி 14 May 2021 3:10 PM GMT (Updated: 14 May 2021 3:10 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 254- ஆக உள்ளது.

மும்பை,

நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக உள்ள மராட்டியத்தில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒருநாள் பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டி பதிவான நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று சற்று குறைந்து உள்ளது. எனினும், சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 39,923- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றில் இருந்து 53 ஆயிரத்து 249- பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 695- பேர் உயிரிழந்துள்ளனர்.

மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 53 லட்சத்து 09 ஆயிரத்து 215- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 47 லட்சத்து 07 ஆயிரத்து 980- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் மராட்டியத்தில் மட்டும் 79 ஆயிரத்து 552- பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா தொற்று பாதிப்புடன் மாநிலத்தில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 254- ஆக உள்ளது. 

Next Story