கோவா: ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கடந்த 4 நாட்களில் கொரோனா சிகிச்சை மையத்தில் 75 பேர் பலி


கோவா: ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கடந்த 4 நாட்களில் கொரோனா சிகிச்சை மையத்தில் 75 பேர் பலி
x
தினத்தந்தி 14 May 2021 8:30 PM GMT (Updated: 14 May 2021 8:30 PM GMT)

கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சி மையத்தில் கடந்த 4 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 75 பேர் உயிரிழந்துள்ளனர்.

பனாஜி,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்து உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பல நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. 

இதற்கிடையில், கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், அந்த சிகிச்சை மையத்தில் கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பலர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்துள்ளனர். 

ஆக்சிஜனை உரிய நேரத்தில் கொரோனா சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லாமல் காலதாமதம் ஏற்பட்டுதல், ஆக்சிஜன் அளவு குறைதல் போன்றவற்றால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் அந்த சிகிச்சை மையத்தில் கடந்த 4 நாட்களில் 75 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆகிசிஜன் விநியோக சிக்கலால் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றக்குறையில் கடந்த செவ்வாய்கிழமை 15 பேரும், புதன்கிழமை 21 பேரும், வியாழக்கிழமை 26 பேரும், வெள்ளிக்கிழமை 13 பேரும் என மொத்தம் 75 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கோவா துணை முதல்மந்திரி விஜய் சர்தேசாய் தெரிவித்துள்ளார். 

Next Story