புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக வரும் 17ஆம் தேதி மத்திய அரசு ஆலோசனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 May 2021 5:55 AM GMT (Updated: 15 May 2021 5:55 AM GMT)

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக வரும் 17ஆம் தேதி மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுடெல்லி, 

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, இந்தியா முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக மே 17ஆம் தேதி அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடனும் மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரிவால் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். 

தற்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப, புதிய கல்வி கொள்கையும் ஆன்லைனில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா சூழல் மற்றும் ஆன்லைன் கல்வியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக மந்திரி ரமேஷ் பொக்ரிவால் மறுஆய்வு செய்வார் என்று கூறப்படுகிறது. 

Next Story