தேசிய செய்திகள்

சிகிச்சை முடிந்து புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி திரும்புவதில் தாமதம்; அதிகாரிகளுடன் பா.ஜ.க. நடத்திய ஆலோசனையால் என்.ஆர்.காங்கிரஸ் அதிருப்தி + "||" + 10151579_NRC dissatisfied with BJP's consultation with authorities over delay in Rangasamy's return after treatment

சிகிச்சை முடிந்து புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி திரும்புவதில் தாமதம்; அதிகாரிகளுடன் பா.ஜ.க. நடத்திய ஆலோசனையால் என்.ஆர்.காங்கிரஸ் அதிருப்தி

சிகிச்சை முடிந்து புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி திரும்புவதில் தாமதம்; அதிகாரிகளுடன் பா.ஜ.க. நடத்திய ஆலோசனையால் என்.ஆர்.காங்கிரஸ் அதிருப்தி
முதல்-அமைச்சர் ரங்கசாமி புதுவை திரும்புவதில் தாமதமாகும் நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தொடர்ந்து சிகிச்சை

சட்டமன்ற தேர்தல் முடிவுக்குப் பின் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி உறுதியானது. இதையடுத்து முதல்-அமைச்சராக கடந்த 7-ந்தேதி ரங்கசாமி பதவி ஏற்றுக் கொண்டார். அதற்கு முந்தைய நாள் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் ரங்கசாமிக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. உடனே அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் சிகிச்சை முடிந்து புதுச்சேரி திரும்புவார் என்று தகவல்கள் பரவின. ஆனால் சிகிச்சை முடிந்து திரும்புவதில் தாமதமாகி வருகிறது. அதாவது இன்னும் ஓரிரு நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்து இருப்பதாகவும், அதை ஏற்று ரங்கசாமி ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சையை தொடருவதால் அவர் புதுவைக்கு திரும்புவது தாமதமாகி உள்ளது.

அதிகாரிகளுடன் ஆலோசனை

தற்போது கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் அண்டை மாநிலமான தமிழகத்தில் தொற்று தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால் புதுச்சேரியில் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம், சட்டமன்றம் கூட்டம், புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு என எதுவுமே நடைபெறாத நிலையில் அரசு பணிகள் முடங்கி உள்ளன. இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தொற்று சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது கொரோனா தடுப்பு பணிகளில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆட்சியில் அங்கம் வகிக்க போகும் பா.ஜ.க.வும் துணை முதல்-அமைச்சர் உள்பட 3 அமைச்சர்கள் பதவிகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளது. இத்தகைய சூழலில் கொரோனா நிவாரண பணிகள் முடங்கி உள்ளதாக அக்கட்சி எம்.எல்.ஏ.க்களும் கருதினர். இதைத்தொடர்ந்து சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

என்.ஆர்.காங்கிரஸ் அதிருப்தி

இதுபோன்ற அதிகாரிகள் கூட்டங்களை முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர்கள் தான் நடத்துவது வழக்கம். ஆனாலும் முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்றுள்ள நிலையில் அவரது கவனத்துக்கு கொண்டு செல்லாமல் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இப்படி ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தியது என்.ஆர். காங்கிரஸ் கட்சி வட்டாரத்தை அதிருப்திக்குள்ளாக்கியது.

இ்ந்த கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நமச்சிவாயம், கூட்டணிக்குள் குழப்பம் இல்லை. முதல்-அமைச்சரின் உடல் நலன்தான் முக்கியம். பதவி ஏற்பை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும் ஊரில் முதல்-அமைச்சர் இல்லாதநிலையில் பா.ஜ.க. தன்னிச்சையாக நடத்திய இந்த ஆலோசனை கூட்டம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதாகவே கருதப்படுகிறது.

சூடு பறக்கும் அரசியல்

இன்னும் ஓரிரு நாட்களில் புதுவை திரும்பும் முதல்-அமைச்சர் ரங்கசாமி இதுபோன்ற அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தேர்தல் முடிவுக்குப் பின் புதுவை அரசியல் களம் சூடு பிடித்து இருந்த நிலையில் தற்போதைய நிலவரத்தால் மேலும் அதை அதிகப்படுத்தியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. புதுவையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய கோரி கவர்னரிடம் அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மனு
மாநில தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக முடிவெடுத்துள்ளதால் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.
2. புதுச்சேரியில் திரையரங்குகள் மற்றும் மது பார்களை திறக்க அனுமதி
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
3. புதுவையில் நடப்பது மோசமான ஆட்சி: புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி
காங்கிரஸ் ஆட்சியின்போது தடுத்த திட்டங்களுக்கே தற்போது ஒப்புதல் அளிக்கப்படுகிறது. புதுவையில் நடப்பது மோசமான ஆட்சி என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
4. பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்திக்க சென்ற போது எடியூரப்பா 6 பைகளில் எடுத்து சென்றது என்ன? குமாரசாமி கேள்வி
பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்திக்க சென்றபோது 6 பைகளில் எடியூரப்பா எடுத்து சென்றது என்ன? என்பது குறித்து குமாராசமி கேள்வி எழுப்பி உள்ளார்.
5. புதுவையில் மதுபானங்களுக்கு 20 சதவீதம் சிறப்பு வரி: இன்று முதல் அமல்
புதுவையில் மதுபானங்களுக்கு 20 சதவீதம் கூடுதல் வரி விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.