இந்தியாவில் ஒட்டுமொத்த கொரோனா பரவல் நிலைமை சீராகி வருகிறது - மத்திய அரசு தகவல்


இந்தியாவில் ஒட்டுமொத்த கொரோனா பரவல் நிலைமை சீராகி வருகிறது - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 15 May 2021 8:59 PM GMT (Updated: 15 May 2021 8:59 PM GMT)

இந்தியாவில் ஒட்டுமொத்த கொரோனா பரவல் நிலைமை சீராகி வருவதாக மத்திய அரசின் நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாட்டின் கொரோனா பரவல் சூழ்நிலை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அதில், சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இணைச்செயலாளர் லவ் அகர்வால் கூறுகையில், கடந்த 12 நாட்களாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. 

மே 3-ம் தேதி கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் சதவிகிதம் 17.13 என்ற அளவில் இருந்த நிலையில் அது தற்போது 15.1 சதவிகிதமாக குறைந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 83.8 என்ற அளவில் உள்ளது. கடந்த 5 நாட்களில் ஒட்டுமொத்தமாக கொரோனா உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 20 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் குறையத்தொடங்கியுள்ளது என்றார். 

அதன் பின்னர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இடம்பெற்றுள்ள நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் விகே பால் கூறுகையில். கொரோனாவின் 2-வது அலை குறிப்பிட்ட அளவிற்கு சீராகி வருகிறது என்பதை நமக்கு காட்டுகிறது. வைரஸ் பரவலில் சில மாநிலங்களில் தெளிவான முறை உள்ளது. சில மாநிலங்களில் நிலைமை கவலை அளிக்கும் வகையிலும், சில மாநிலங்களில் வைரஸ் பரவல் அதிகரிக்கவும் தொடங்கியுள்ளது. இது கலப்பு சூழ்நிலை. 

ஆனால், நாட்டில் ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் சூழ்நிலை சீராக உள்ளது. வைரஸ் பரவல் மேலும் சீரடையவும் வைரஸ் பரவல் குறையவும் நாங்கள் தொடர்ந்து வேலை செய்வோம் என்று நம்புகிறோம்’ என்றார்.

Next Story