மராட்டிய மாநிலத்திற்கு வரும் லாரி டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் இருந்து விலக்கு


மராட்டிய மாநிலத்திற்கு வரும் லாரி டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் இருந்து விலக்கு
x
தினத்தந்தி 16 May 2021 4:04 AM GMT (Updated: 16 May 2021 4:04 AM GMT)

மராட்டிய மாநிலத்திற்கு வரும் லாரி டிரைவர்களுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர் சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில அரசு கடந்த சில நாட்களுக்கு முன் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரெயில், சாலை மார்க்கமாக மராட்டியம் வரும் அனைவரும் கட்டாயம் ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனை செய்து அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என உத்தரவை பிறப்பித்து இருந்தது. இது சரக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு பொருந்தும் என்றும் கூறியிருந்தது.

மேலும் இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது. இந்த நிலையில் மாநில அரசு வெளிமாநிலங்களில் இருந்து மராட்டியம் சரக்கு கொண்டு வரும் லாரி டிரைவர்களுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனை கட்டாயம் இல்லை என கூறியுள்ளது.

இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள தகவலில், “லாரி டிரைவர்கள் வெப்பநிலை பரிசோதனை, கொரோனா அறிகுறிகள் உள்ளதா என சோதனை செய்யப்பட்ட பிறகு உள்ளே வர அனுமதிக்கப்படுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவை சரக்குவாகன டிரைவர்கள் வரவேற்று உள்ளனர்.

Next Story