தேசிய செய்திகள்

லடாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 177 பேருக்கு கொரோனா + "||" + Corona to 177 persons in the last 24 hours in Ladakh

லடாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 177 பேருக்கு கொரோனா

லடாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 177 பேருக்கு கொரோனா
லடாக்கில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,333 ஆக உயர்ந்துள்ளது.
லே,

கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. லடாக்கில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால் அங்கும் கடந்த சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று வெளியான அறிக்கையின்படி, லடாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,333 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 181 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். லடாக்கில் தற்போது 1,549 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குஜராத் மாநிலத்தில் கொரோனா இறப்பில் உண்மையான எண்ணிக்கை மறைப்பா? - காங்கிரஸ் கட்சி விளக்கம் கோருகிறது
குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைத்துக்காட்டப்படுவதாக காங்கிரஸ் கட்சி புகார் கூறி விளக்கம் கோருகிறது.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.31 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14.25 கோடியாக உயர்ந்துள்ளது.
3. கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; அமைச்சர் பி.கே.சேகர் பாபு வேண்டுகோள்
கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. கொரோனா சூழலில் பதவி ஏற்பு முக்கியமில்லை; புதுச்சேரி பா.ஜ.க. சட்டமன்ற கட்சி தலைவர் நமச்சிவாயம் பேட்டி
கொரோனா சூழலில் பதவி ஏற்பு முக்கியமில்லை என்று பா.ஜ.க. சட்டமன்ற கட்சி தலைவர் நமச்சிவாயம் கூறினார்.
5. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிப்பு: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,410 பேர் பாதிப்பு 14 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று 1,410 பேர் பாதிக்கப்பட்டனர்.