தேசிய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ்க்கு 84 நாட்களுக்கு பிறகே முன்பதிவு - மத்திய அரசு தகவல் + "||" + Booking 84 days after the 2nd dose of Covshield vaccine - Federal Information

கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ்க்கு 84 நாட்களுக்கு பிறகே முன்பதிவு - மத்திய அரசு தகவல்

கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ்க்கு 84 நாட்களுக்கு பிறகே முன்பதிவு - மத்திய அரசு தகவல்
கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திக்கொள்ள 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் தேதி ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா மிகத்தீவிரமாக பரவி வருகிறது. மேலும் மருந்து மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. உலக நாடுகள், உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியை அதிகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திக்கொள்ள 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் தேதி ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 2வது டோஸ் செலுத்திக்கொள்வதற்கான தேதியை மாற்றிக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி காலம் 90 நாட்கள் என அதிகரிக்கப்பட்ட நிலையில் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளியை குறைக்க மனு; டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு
கோவிஷீல்டு தடுப்பூசி தவணைக்கான இடைவெளியை குறைக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
2. ஆய்வுகளின் அடிப்படையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி மாற்றம் - நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தகவல்
கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி குறித்து மக்கள் பீதியடைய தேவையில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
3. புனேவில் இருந்து 6 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி சென்னை வந்தது
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.
4. கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி அதிகரிப்பு: வல்லுநர் குழுவின் பரிந்துரைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல்
கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி 6 முதல் 8 வாரங்களில் இருந்து 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
5. கோவிஷீல்டு தடுப்பூசி: கொரோனாவால் உயிரிழக்கும் அபாயத்தை 80 சதவீதம் குறைக்கும் - இங்கிலாந்து சுகாதாரத் துறை
ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி, கொரோனாவால் உயிரிழக்கும் அபாயத்தை 80 சதவீதம் குறைக்கும் என்று இங்கிலாந்து சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.